மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கிழக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும், மேலும் வருடத்திற்கு 150 நாட்கள் வேலையும் தினசரி குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 400 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். வடக்கு மாவட்ட தலைவர் ராஜ்மோகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.