விருதுநகரில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக எண்ணிக்கையில் போட்டியிட சீட்டுகள், உள்ளாட்சியில் 30% பங்கு ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி, அகில இந்திய தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பது, விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் நிலைப்பாட்டை ஆதரிப்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மூத்த காங்கிரஸ் நிர்வாகி சிவகுருநாதன், 2006-ல் திமுக 96 எம்எல்ஏக்களுடன் இருந்தபோது காங்கிரஸ் 36 எம்எல்ஏக்களின் ஆதரவை வழங்கியதை நினைவு கூர்ந்தார்.