விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந. ஸ்ரீநாதா தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில், மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மகளிர் காவல் நிலையத்தில் பெறப்படும் புகார்களை காலதாமதமின்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.