விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சிவகாசியைச் சேர்ந்த மீனாட்சி என்பவரிடம் நகை மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய வழக்கில் குற்றவாளிகளுக்கு சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். 1 தண்டனை வழங்கியுள்ளது. முதல் குற்றவாளி கார்த்தீஸ்வரிக்கு 5 ஆண்டுகளும், மற்ற மூன்று குற்றவாளிகளுக்கு தலா 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி சம்பவம் கடந்த 04.04.2018 அன்று நடைபெற்றது.