விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரமநேரி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஏ. துலுக்கப்பட்டியைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் முன்விரோதம் காரணமாக அவரது வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்கப்பட்டார். வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாண்டீஸ்வரன், மாரீஸ்வரன், முத்துப்பாண்டி, மாரிகாளை ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரனேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.