விருதுநகரில் பெண் போலீசுக்கு நேர்ந்த கொடுமை

1பார்த்தது
விருதுநகரில் பெண் போலீசுக்கு நேர்ந்த கொடுமை
விருதுநகரில், பணியில் இருந்த பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட முதல்நிலை போலீஸ் கார்த்திகேயன், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். கார்த்திகேயனுக்கும், ஊரக போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் பெண் போலீசுக்கும் பழக்கம் இருந்ததாகவும், இது குறித்து கார்த்திகேயனின் மனைவி சில நாட்களுக்கு முன் போலீசில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் கார்த்திகேயன் பெண் போலீசை வழிமறித்து தகராறு செய்தார். இந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி