அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், 125 நாள்
வேலை திட்டத்தில் கரு விழித்திரை ஸ்கேன் செய்யும் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, சத்திர ரெட்டியபட்டி கிராமத்தில் சங்கத் தலைவர் ஜெயபாண்டி தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி பெயரில் 125 நாள்
வேலை திட்டத்தை செயல்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கி, உடனடியாக அதைத் தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் பூங்கோதை, மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு, ஊராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.