விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தீவிர வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை தேர்தல் ஆணையம் கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில், மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.