மாற்று திறனாளிகள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
மாற்று திறனாளிகள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக, மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில், தமிழக அரசு பிற மாநிலங்களில் வழங்குவதைப் போல தங்களுக்கும் ஊனத்திற்கு ஏற்றவாறு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டவர்களை மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி