மாற்றுத்திறனாளிகள் இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டம்

326பார்த்தது
விருதுநகரில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை பிற மாநிலங்களுக்கு இணையாக உயர்த்தி வழங்கக் கோரி 2வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, திரிபுரா, ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்களில் வழங்கப்படும் உதவித்தொகையை ஒப்பிட்டு, தமிழகத்திலும் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி