விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இளைஞர் நீதி சட்டம் 2015, பிரிவு 4-ன்படி, சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களுக்குத் தேவையான உதவிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.