விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நபார்டு வங்கி தயாரித்த 2026-27 நிதியாண்டிற்கான ரூ. 22,681.31 கோடி மதிப்பிலான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார். இது விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான கடன் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது.