தமிழகம் முழுவதும் இன்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் தேசபந்து மைதானத்தில், சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மையம், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, தமிழ் புலிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களை எழுப்பினர்.