விருதுநகரில் நடைபெற்ற
திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தேர்தலுக்குப் பிறகு கட்சி ஆற்ற வேண்டிய பணிகள், எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் தலைமையின் அறிவுரைகளை செயல்படுத்துவது குறித்து விளக்கினார். சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தெற்கு மாவட்டத்திலிருந்து இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.