விருதுநகர் அருகே குல்லூர்சந்தையில் உள்ள 127 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட குல்லூர்சந்தை நீர்த்தேக்கம், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் முழுமையாக நிரம்பியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக விருதுநகர் நகராட்சி கழிவுகள் கௌசிகா ஆற்றில் நேரடியாக விடப்படுவதால், அந்த கழிவுநீர் நீர்த்தேக்கத்தில் கலந்து விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. தற்போது அணை முழுமையாக நிரம்பிய நிலையில், கழிவுநீர் கலந்த நீரின் காட்சி வெளியாகியுள்ளது.