எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

0பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சி ஓ காலனி பகுதியைச் சேர்ந்த பால் கடை உரிமையாளர் ரவிக்குமார், தனது எலக்ட்ரிக் பைக்கில் புதிய பேருந்து நிலையம் அருகே பொருட்கள் வாங்கச் சென்றபோது, திடீரென பைக் புகைந்து தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக ரவிக்குமார் பைக்கை சாலையிலேயே போட்டுவிட்டு ஓடியதால் உயிர் தப்பினார். பின்னர், விற்பனை நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. சேதமடைந்த பைக் விற்பனை நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து பஜார் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி