விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புப் பதிவு, புதுப்பித்தல், உதவித்தொகை கோருதல், கூடுதல் தகுதிப் பதிவு மற்றும் முகவரி மாற்றம் போன்ற அனைத்துச் சேவைகளும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளம் மூலம் கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி, தங்களின் இருப்பிடத்திலிருந்தே இந்தச் சேவைகளை எளிதாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.