வெம்பக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில், வேளாண்மை துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ், நித்திய கல்யாணி மற்றும் அவுரி பயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி நடைபெற்றது. இதில் வட்டார நித்திய கல்யாணி மற்றும் அவுரி சாகுபடி செய்யும் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை உதவி இயக்குனர் திரு. கு. முத்தையா தலைமை தாங்கினார். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் திரு. ராமசுப்ரமணியம், அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.