விருதுநகர் மாவட்டத்தில் 15,82,225 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் எளிதாக படிவங்களைப் பெறவும், 2002 வாக்காளர் பட்டியலில் பெயர்களைக் கண்டறியவும், படிவங்களை நிரப்பவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிக்கவும் சிறப்பு முகாம்கள் 19.11.2025 புதன் மற்றும் 20.11.2025 வியாழன் ஆகிய தினங்களில் நடைபெற்றன. வாக்காளர்கள் பெருமளவில் பங்கேற்றனர். எனவே, இந்த சிறப்பு முகாம்கள் 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இதுவரை படிவங்களைப் பெறாதவர்களும், பூர்த்தி செய்யாதவர்களும் இச்சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.