விருதுநகர் மாவட்டத்தில், விவசாயிகள் நீர் வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள 403 நீர்நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் களிமண் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேல் வைப்பாறு, வைப்பாறு, குண்டாறு படுகை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் கீழ் இந்த நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தகுதியுடைய பயனாளிகள் tnesevaitngov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.