விருதுநகர் மாவட்டத்தில், வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் நில உடமை விவரங்களை வலைதளத்தில் பதிவு செய்வது அவசியமாகிறது. இதன் மூலம் அரசின் நலத்திட்ட பலன்களைப் பெற ஒவ்வொரு முறையும் நில உடமை விபரங்கள், அடங்கல் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய தேவையில்லை. ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணுடன் நில உடமை விபரங்களை இணைக்கும் இத்திட்டம் கிராமங்கள் தோறும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை விற்பனை வணிகத் துறை அலுவலர்களால் செயல்படுத்தப்படுகிறது.