வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு காத்திருப்பு போராட்டம்

0பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்கக் கோரி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. மேலும், அரசு பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்ப வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பை ஐந்து சதவீதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து, ஏற்கனவே இருந்ததைப் போன்று 25% நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி