விருதுநகர் மதுரை சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வங்கியின் மேல்தளத்தில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மூன்று வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விடுமுறை என்பதால் வங்கி செயல்படாத நிலையில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் கருகி நாசமடைந்தன.