விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிர்லா. இவர் விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் பகுதியில் மரக்கட்டைகளை வாங்கி அவற்றை அரைத்து விற்கும் தொழில் செய்து வருகிறார். இன்று (மார்ச் 30) ஆலை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் எதிர்பாராத விதமாக ஆலையிலிருந்து புகை மண்டலமாக இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆலை உரிமையாளருக்கும் சூலக்கரை காவல் நிலைய காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த சூலக்கரை காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் எரிந்த கரிக்கட்டைகளை தண்ணீர் அடித்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் லட்சம் மதிப்பிலான இயந்திரம் மற்றும் கரிக்கட்டைகள் தீயில் எரிந்து நாசமாகியது. இந்த விபத்து குறித்து சூலக்கரை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.