விருதுநகர் கலைஞர் நகரைச் சேர்ந்த சிவகார்த்தி என்பவருக்குச் சொந்தமான புல்லலக் கோட்டை அருகே உள்ள பழைய இரும்பு, பேப்பர் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கரும்புகை வானுயர எழுந்தது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் குடோனில் இருந்த பழைய மின்சாதனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மேற்கு காவல் நிலைய போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.