மீனவ சமுதாயபட்டதாரகள் தேர்வில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

7பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில், மீனவ சமுதாயத்தைச் சார்ந்த உள்நாட்டு மீனவ கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்களுக்காக சிறப்பு பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெற விரும்புவோர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் (www.fisheries.tn.gov.in) இருந்து விண்ணப்ப படிவத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் அல்லது விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 25.11.2025-க்குள் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04562-244707 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி