விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் உள்ள இ. குமாரலிங்கபுரம், இ. முத்துலிங்கபுரம், குலசேகரபுரம், வேப்பிலை பட்டி கிராமங்களில் மான் மற்றும் காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளப் பயிர்கள் சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள், சிவகாசி வனச்சரக அலுவலரிடம் பயிர் சேதத்தை பார்வையிட்டு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தனர். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, சிவகாசி வனச்சரக அலுவலர் நேரடியாக வந்து ஆய்வு செய்து, சேதத்தின் அளவை மதிப்பிட்டார்.