முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேச்சு

289பார்த்தது
விருதுநகரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவிற்கு விழுந்துவிடும் என திமுகவினர் நினைப்பதாகவும், ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் கூறினார். சிறுபான்மையினரை நம்பி திமுக 50 ஆண்டுகளாக ஏமாற்றி வருவதாகவும், அதிமுக பாஜகவிற்கு அடிமையாக இருப்பதாக திமுகவினர் கூறுவதாகவும், ஆனால் அதிமுக தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திமுக பிரதமருக்கு கருப்பு கொடி காட்டியதும், முதல்வருக்கு வெள்ளை கூடை காட்டியதும் நாடகமே என்றும் அவர் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி