விருதுநகர்: பள்ளியில் ஆசிரியர்கள் நியமிப்பதில் மோசடி

64பார்த்தது
விருதுநகர் மாவட்டத் திருச்சுழியில் இந்து வைத்திலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 11 மற்றும் 12ம் வகுப்பில் 98 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பில் பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால், அரசு உத்தரவின்படி அருகில் இயங்கி வரும் பள்ளிகளில் அதிகம் உள்ள ஆசிரியர்களை நியமிக்கும் உத்தரவு இருப்பதால் இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகவும், 

இதை இந்து வைத்திலிங்க நாடார் பள்ளி நிர்வாகம் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதாகவும், பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிந்த உறவினர்களை பள்ளியில் ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வாறு புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் அரசுக்கு நிதி இழப்பீடு ஏற்படும் என்றும் உள்ளது. அதேபோல் தமிழகத்தில் எந்த அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இரவு காவல் பணி வழங்கப்படவில்லை என்றும், அந்த விதிமுறைகளை மாறாக இந்தப் பள்ளியில் இரவு காவலாளி பணி புரிவதாகவும், வருகைப் பதிவேடு போலியாக தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் இன்று திருச்சுழி இந்து நாடார் சங்கம் சார்பாக நிர்வாகிகள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.

தொடர்புடைய செய்தி