போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

18பார்த்தது
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், TNPSC, TNUSRB, SSC, RRB, TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முப்படைகளின் போட்டித் தேர்வுகளுக்குப் பொதுவான பாடங்களான பொது அறிவு, நுண்ணறிவு, திறனறிவு, காரணவியல், மொழி அறிவு (தமிழ்/ஆங்கிலம்) ஆகியவற்றிற்கு இப்பயிற்சி வழங்கப்படும். பயிற்சி வகுப்புகள் 09.02.2026 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கும். இலவச பாடவாரியானத் தேர்வுகள் மற்றும் முழு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரடியாக மையத்திலோ பதிவு செய்யலாம்.

தொடர்புடைய செய்தி