விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பான 'திசை' திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதியுடன் கூடிய இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 12-ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகப்படுத்தவும், தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார் செய்யவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.