பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பு

1பார்த்தது
விருதுநகரில், பைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் மைன்ஸ் டிரஸ்ட் இணைந்து, சமூக பொறுப்பு நிதி தலைமை அதிகாரி சிவராம் கிருஷ்ணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் லியாகத் அலி ஆகியோர் குத்து விளக்கேற்றி, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பைத் துவக்கி வைத்தனர். இந்தத் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 240 பெண்களுக்கு ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில், 3 மாத காலத்திற்கு அடிப்படை தையல், பிளவுஸ், சுடிதார் மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ. 1000 மதிப்புள்ள தையல் கருவிகள் தொகுப்பும் இலவசமாக வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி