விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850, மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி முழுமையான சிகிச்சைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.