விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தலைமையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் தற்போதைய படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓய்வூதியம், படைவீரர்களுக்கான சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.