தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், விருதுநகரில் இன்று (மே 30) காலை முதல் வெயில் சுட்டெரித்தது. மாலை திடீரென அரை மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் போல் மழைநீர் ஓடியது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.