விருதுநகர் அல்லம்பட்டியில் ஜீவராஜன் என்பவர் தனது மனைவி அந்தோணி பிரியாவை குடும்ப தகராறில் சமயலறையில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு வரமாட்டேன் என கணவர் கூறியதால் வாக்குவாதம் முற்றியதில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே அந்தோணி பிரியா உயிரிழந்தார். பின்னர் ஜீவராஜன் விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.