தமிழ்நாடு ஐசிடிஎஸ் ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 19,500 ஊதியம் வழங்க வேண்டும் என்றும், வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.