விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக நகரச் செயலாளர் S. R. S. தனபாலன், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜகுரு தலைமை வகித்தனர். காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி முன்னிலை வகித்தார். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில் கனி மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.