முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேட்டி

311பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுகள் அனைத்தும் திடமான, தைரியமான, நேர்மையானவை என்றும், அதிமுக தொண்டர்களின் கருத்துக்களை உள்வாங்கி எடுக்கப்படுபவை என்றும் தெரிவித்தார். கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீதான நடவடிக்கை குறித்து விளக்கினார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முகம் என்றும், அவரது கருத்துக்களை ஏற்பவர்களே உண்மையான விசுவாசிகள் என்றும் கூறினார். மேலும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மாற்று கருத்துக்களை கூறுபவர்கள், தலைமையை விமர்சிப்பவர்கள், அதிமுக தலைமைக்கு தேதி குறிப்பவர்கள் யாராக இருந்தாலும் அதிமுக தலைமை பார்த்துக் கொண்டிருக்காது என்றும், திமுக தங்களது தோல்விக்கான காரணத்தை இப்போதே தேடுகிறது என்றும் தெரிவித்தார். SIR திட்டம் வரவேற்கத்தக்கது, இன்றைய காலகட்டத்தில் தேவையானது என்றும் குறிப்பிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி