விருதுநகரில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் வழக்கு விரைவாக முடிக்கப்பட்டிருப்பதற்கு நீதித்துறைக்கும் விரைவாக நடத்திய சட்டத்துறைக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இதேபோன்று கடுமையான தண்டனைகளை விதித்து பெண்களுடைய பாதுகாப்பிற்கு சட்டத்துறை எடுத்துக்காட்டாக விளங்குவதாக தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர் டெல்லியில் யமுனை ஆற்றங்கரை பகுதியில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாகவும் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளை பாஜக அரசு அமைந்ததும் அவசர அவசரமாக இடித்து வருவதாகவும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்த காலத்தில் கூட அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் இடிக்கப்படாமல் இருந்ததாகவும் இது வருந்தக்கூடியது என்றும் இதற்காக பாஜக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்றிருக்க வேண்டும் என்றும் மேலும் டெல்லி பாஜக அரசு தமிழக மக்கள் மீது எந்தவித அக்கறையையும் கொள்ளவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் பாஜக எப்போதும் தமிழக மக்களின் விரோத அரசுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக கூறினார்