விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தமிழகத்தில் திமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது என தி.மு.க தலைவர் விஜய் அறிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தி.மு.க மற்றும் பாஜக கட்சிக்கும் இடையிலான பஞ்சாயத்து என்றார். மேலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பது விஜய் அறிவித்திருப்பது மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு சொன்ன பதிலாகத்தான் பார்க்கிறோம் எனவும் தி.மு.க இந்த முடிவை எவ்வளவு நாளைக்கு எடுத்துச் செல்கிறார்கள் என்று பார்ப்போம் என்றார்.
மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்த தி.மு.க தலைவர் விஜயை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணிக்கு அழைத்திருப்பது என்பது பாஜகவின் பரிதாப நிலை புரிகிறது என்றார். மேலும் பாஜக உடன் விஜய் கூட்டணி கிடையாது என அறிவித்த பிறகு பாஜக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்டவைகளை தி.மு.கவினர் மீது ரெய்டு நடைபெறுமா அல்லது நடைபெறாதா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் எனவும் அவ்வாறு அமலாக்கத்துறை சோதனையை எதிர்கொள்ள தி.மு.கவினர் தயாராக இருக்கிறார்களா எனவும் அந்த சோதனைகளை எல்லாம் தாங்கிக் கொள்ளும் சக்தி தி.மு.கவினர் இடையே உள்ளதா என மாணிக்கம் தாகூர் எம்பி கேள்வி எழுப்பினார்.