விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தமிழகத்தில் தொடர்ந்து வரும் கொலை மற்றும் பாலியல் குற்றங்களைத் தடுக்க காவல்துறையில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆட்சியில் பழுதடைந்த தமிழகத்தின் சட்ட ஒழுங்கை முதலமைச்சர் விரைந்து சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த சட்டமன்றத் தேர்தல் ஊழல் மற்றும் சட்ட ஒழுங்கை மையமாக வைத்தே நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். காவல்துறையில் மாற்றங்கள் விரைவாக கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.