விருதுநகர் நகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் தென் மண்டல ஆயத்த மாநாடு நடைபெற்றது. குறைந்தபட்ச கூலிச் சட்டம் அமலாக்கம், கொரோனா கால தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் டிசம்பர் 8-ம் தேதி சென்னை பனகல் மாளிகையில் உள்ள ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் தென் மண்டல நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.