விசிக மாவட்ட மண்டல செயலாளர்கள் அறிமுக கூட்டம்

1பார்த்தது
விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்ட மற்றும் மண்டல செயலாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் செந்தில் கனி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மண்டல செயலாளர் வழக்கறிஞர் இன்குலாப் முன்னிலை வகித்தார். மூத்த நிர்வாகிகள் ஊர்க்காவலன், சாத்தூர் சந்திரன் உள்ளிட்டோர் புதிய செயலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஜேகேசெல்வன், ஜோசப், காளிமுத்து, சாது முனியசாமி, கண்ணன் அரசு, லிங்கசாமி, செல்வம், முத்துசாமி, தமிழ்ச்செல்வன், ராபர்ட், முருகன், ராஜ் குமார், குணசீலன், ராஜா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி