விருதுநகர் தேசபந்து மைதானத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கழக அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமையில் நகரச் செயலாளர் T. P. S. வெங்கடேஷ் ஏற்பாட்டில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஒன்றிய, கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.