விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 790 கிராம் எடையில் பிறந்த பச்சிளம் குழந்தை, 79 நாட்கள் தொடர் கங்காரு தாய் பராமரிப்பு சிகிச்சை மூலம் 1.420 கிலோ எடை உயர்த்தி முழு ஆரோக்கியத்துடன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள்ராஜ்-முத்துமாரி தம்பதியினரின் ஆண் குழந்தைக்கு, குறை பிரசவத்தில் பிறந்த நிலையில், செயற்கை சுவாசம், நுரையீரல் வளர்ச்சிக்கான உயரிய மருந்து மற்றும் கங்காரு தாய் பராமரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒரு கிலோவிற்கும் குறைவாகப் பிறந்த 40 குழந்தைகளில் 20 பேர் காப்பாற்றப்பட்டதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அரவிந்த் பாபு தெரிவித்தார்.