விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுத்தலைவர் எஸ். காந்திராஜன் தலைமையிலான குழு, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகரில் நகராட்சி நிருவாகம், குடிநீர் வழங்கல், நெடுஞ்சாலைகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தது. பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.