விருதுநகர் மாவட்டத்தில், மத்திய அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், "விளைநிலம் காப்போம் இயக்கம்" என்ற விழிப்புணர்வு முகாம் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை 450 கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா இதைத் தெரிவித்துள்ளார். இந்த முகாமின் மூலம், வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு அத்தியாவசியத் தொழில்நுட்பத் தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.