இளம் பெண்ணை பாலில் வளர்க்கற முயற்சி செய்தவர் கைது

5பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணியாற்றி வந்த அப்துல் அஜீஸ் (25), உடல்நிலை சரியில்லாத 22 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டபோது, அப்துல் அஜீஸ் அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். வலியால் வெளியே வந்து கூச்சலிட்ட பெண்ணின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அப்துல் அஜீஸை மடக்கிப் பிடித்து நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காயமடைந்த பெண் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நரிக்குடி போலீசார் அப்துல் அஜீஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.