சென்னை: சென்னையில் கோழிக்கறி விலை கிலோ 180 முதல் 200 ரூபாயாகவும், நாட்டுக்கோழி இறைச்சி 350 முதல் 500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஆட்டு இறைச்சி கிலோ 900 ரூபாய்க்கும், இறால் மீன் கிலோ 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வால் சாமானிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு நுகர்வோரை பெரிதும் பாதித்துள்ளது.